கடலூர் மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்பிரசாத் (26), குமார் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை சோத்திக்குப்பத்திலிருந்து மந்தாரக்குப்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால், திடீரென அவர்கள் இருவரையும் மின்னல் தாக்கியது. இதில் துடிதுடித்து கீழே விழுந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலூரில் மின்னல் தாக்கி இருவரும் மின்சாரம் தாக்கி ஒருவரும் மரணம் - Lightning struck death in cuddalore
கடலூர்: மந்தாரக்குப்பம் அருகேமின்னல் தாக்கி இருவரும் விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் அருகேயுள்ள சத்தியவாடியைச் சேர்ந்த கலியன் மகன் கொளஞ்சி (32) என்பவர் ஆடு மேய்க்க அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மழையால் அறுந்து விழுந்த மின்சார ஒயரை மிதித்து, மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.