கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார் பேட்டை - சாத்தாவட்டம் சாலை இடையே தனியார் கல்லூரிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 23 பேரில் பலத்த காயமடைந்த 3 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், சிறிய காயங்களுடன் தப்பித்த 20 நபர்கள் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.