கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரிப் பேருந்து நேற்று காலை கருவேப்பிலங்குறிச்சியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கல்லூரி அருகே சென்ற பேருந்து, முன்னால் சென்ற சிற்றுந்தை முந்திச் செல்ல முயன்று சாலையோர சேற்றில் சிக்கி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 24 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - கடலூரில் 24 மாணவர்களுக்கு காயம்! - thittakkudi private college bus accident
கடலூர்: திட்டக்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 மாணவர்கள் பட காயமடைந்துள்ளனர்.
![பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - கடலூரில் 24 மாணவர்களுக்கு காயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4462585-1093-4462585-1568668207849.jpg)
bus accident
விபத்து நடந்த வீடியோ
இதனையடுத்து காயமடைந்த மாணவ, மாணவிகள் தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த நான்கு மாணவிகள் உள்பட ஐந்து பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.