கடலூர்:2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சூறையாடிய சுனாமி தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தப் பேரிடரில் கடலூரைச் சேர்ந்த 610 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 16ஆம் ஆண்டு சுனாமி நினைவுநாளை முன்னிட்டு, கடலூரைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர் பேரவையினர் சுனாமியில் உயிரிழந்தோருக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.
கடலில் பால் ஊற்றி சுனாமி நினைவுநாளை அனுசரித்த கடலூர் மக்கள் - Tsunami Diaster
சுனாமி நினைவுநாளை முன்னிட்டு கடலூரைச் சேர்ந்த மீனவர் பேரவையினர் கடலில் பால் ஊற்றி, பேரிடரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவு தினத்தை அனுசரித்த கடலூர் மக்கள்
பேரவையின் மாநிலச் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவுப் பேரணியில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள், அம்மாவட்டத்தின் சில்வர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு கல்தூண் முன்பு மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:பொதுமக்கள் இன்றி சுனாமி கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி!