கடலூரில் மாற்று இடம் கேட்டு பாதிரிக்குப்பம் ஊராட்சி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில்:
நாங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தவெளி ரோடு பகுதியில் வசித்துவந்தோம். சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மாற்று இடம் கேட்டதற்கு வருவாய்த்துறை மூலமாக அதற்கான டோக்கன்களை வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே எங்கள் ஊராட்சிக்கு அருகில் உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு காலியிடம் உள்ளது. அந்த இடத்தை எங்களுக்கு மாற்று இடமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் மனு இதையும் படிங்க: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் வழங்கும் முகாம்