தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கடலூர் - புதுச்சேரி இடையே ரயில் போக்குவரத்து' - நாம் தமிழர் வேட்பாளர் உறுதி - கடலூர் சிப்காட் தொழிற்சாலை

கடலூர்: கரும்பு விவசாயிகளுக்கு மானிய முறையில் மின்சாரம் வழங்கப்படும் என கடலூர் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கடலூர் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா

By

Published : Apr 10, 2019, 8:14 PM IST

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் மக்களவை வேட்பாளரான சித்ரா ஈடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

  • கரும்பு விவசாயிகளுக்கு மானிய முறையில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
  • விருத்தாசலத்தில் பீங்கான் தொழில் நலிவுற்று இருப்பதால் அதை விரிவுப்படுத்தி இம்மண்ணில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
  • கடலூரில் இருந்து புதுச்சேரி வரையிலும் ரயில்வே போக்குவரத்திற்கு வசதி செய்யப்படும்.
  • நெய்வேலி என்எல்சி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • கடலூர் அரசு மருத்துவமனைக்கு தரமான மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படும்.
  • அரசு கல்வியைப் பொருத்தவரை ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை மாணவர்களுக்கு தரமான அரசு கல்வி கொண்டுவரப்படும்.
  • கடலூரில் புறவழிச்சாலைகளும் கொண்டுவரப்படும்.
    கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா

மேலும் கடலூரில் இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன்கள் பாதிப்படைகிறது. இதனால் மீனவர்கள் நலம் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சீர் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details