கடலூர்: திமுக நாடாளுமன்ற உறுப்பினராக டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளார். இவர் வெளி நாடுகளுக்கு முந்திரியை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் சென்னை - கும்பகோணம் சாலையில் பண்ருட்டி அருகே உள்ளது.
2010 ஆம் ஆண்டு இவர், பண்ருட்டியில் உள்ள டி.எம்.பி வங்கியில் தனது 3 ஏக்கர் விவசாய நில பத்திரம் வைத்து கடன் பெற்றார். கடந்த 11 ஆண்டுகள் அதற்கு வட்டி கட்டாத நிலையில், அதனை கட்டக் கோரி வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வட்டியுடன் சேர்த்து நிலுவை தொகை 55 கோடி ரூபாயை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால், நீதிமன்றத்தை வங்கி நாடியது.