கடலூர் அடுத்த குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலட்சுமிக்கு பதில் தோல்வியடைந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றிபெற்றதாக அறிவித்ததன் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று காலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வந்தபோது விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் 30 பேர் அவர்களைத் தடுத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறை உதவியுடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளே சென்றபோது விஜயலட்சுமி ஆதரவாளர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் ஊராட்சிமன்ற உறுப்பினர்களைத் தடுத்து முற்றுகை மறைமுகத் தேர்தலில் ஆனந்தி சேகர் என்பவர் ஏழு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தேர்தல் நடத்தவிடாமல் பிரச்னை செய்த 12 பேரை காவல் துறையினர் கைதுசெய்ததால் உடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர்.
இதையும் படிங்க:‘இந்தியா மட்டுமல்ல; ஈரேழு லோகத்திலும்’ - முரசொலி விவகாரத்தில் ஸ்டாலினை சீண்டிய ராமதாஸ்!