தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசியால் ஊசலாடும் மாணவர் உயிர்: காப்பாற்றுமாறு ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்! - கடலூர் தனியார் பள்ளி தடுப்பூசி

கடலூர்: பள்ளியில் தடுப்பூசி செலுத்தியதால் உயிருக்குப் போராடிவரும் ஒன்றாம் வகுப்பு மாணவரை காப்பாற்றுமாறு அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.

cuddalore

By

Published : Nov 11, 2019, 11:26 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சத்திய குமார். இவருடைய மகன் பவன் சங்கர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

பவன் சங்கருக்கு கடந்த 28ஆம் தேதி பள்ளியில் தொண்டைவீங்கி நோய் தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியதால், ஒவ்வாமை காரணமாக மூச்சுத் திணறல், உணவுக் குழாய் பாதிப்பு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு கடந்த 86 நாட்களாக பவன் சங்கர் உயிருக்குப் போராடி வருகிறார்.

பாண்டிச்சேரி, சென்னையிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தும் பவன் சங்கரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதாதல், தற்போது கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது, பவன் சங்கரை வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கர்நாடக மருத்துவமனையும் கைவிரித்துவிட்டது.

மனு அளிக்க வந்திருந்து மாணவரின் உறவினர்கள்

இதனால் மனமுடைந்த அவரது பெற்றோரும் உறவினர்களும், இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உயிருக்குப் போராடிவரும் தன் மகனை காப்பாற்றுமாறும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

இதையும் வாசிங்க : சுபஸ்ரீ வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு நிபந்தனை ஜாமின்!

ABOUT THE AUTHOR

...view details