தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகாத உறவை கண்டித்த கணவரை வாழைக்கு உரமாக்கிய மனைவி - woman killed her husband with the help of boyfriend

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே கணவரை கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை போலீசார் நேற்று (மே. 29) கைது செய்தனர்.

தகாத உறவை கண்டித்த கணவரை வாழைக்கு உரமாக்கிய மனைவி
தகாத உறவை கண்டித்த கணவரை வாழைக்கு உரமாக்கிய மனைவி

By

Published : May 30, 2022, 9:38 AM IST

கடலூர்:நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் கி.அய்யர் என்ற ராஜசேகர் (47) விவசாயி. இவர், தனது சகோதரியின் மகள் விஜயலட்சுமியை (40) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவாராம். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எனவே, பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாத நிலையில், விஜயலட்சுமியின் தம்பி சிவகுமார் விசாரித்துள்ளார். அப்போது ராஜசேகரை கொலை செய்து வாழைத்தோப்பில் வைத்ததாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த்துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர். பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவர் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் விஜயலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவர் ராஜசேகர் கண்டித்து வந்தார். கடந்த 9 மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனையின் போது, அப்பெண்ணும், மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் சடலத்தை புதைத்துள்ளனர். தம்பி சிவக்குமார், ராஜசேகர் மாயமானது குறித்து அடிக்கடி கேட்டு வந்த நிலையில் உண்மையை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, ராஜசேகர் சகோதரர் கி.ராமசாமி (64) அளித்த புகாரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று (மே. 30) ராஜசேகர் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கணவனிடம் தகாத உறவு - பெண்ணை பழிவாங்கிய மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details