கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார்.
இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் அருகில் சென்றுபார்த்ததில் அவர் தனது காதில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் இந்துமதியின் உடலை அவரது பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று இறுதிச்சடங்கை முடித்துவிட்டு உடலை எரித்துள்ளனர்.