தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

கூடலூர் பகுதியில் உலவும் ’T23’ புலியைப் பிடிக்க மயக்க ஊசி, துப்பாக்கி ஆகியவற்றுடன் மருத்துவக் குழுவினரும் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்
9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்

By

Published : Oct 3, 2021, 2:43 PM IST

நீலகிரி: கூடலூர், மசினக்குடி பகுதிகளில் நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதிரடிப் படையினர், வனத்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

8 மணி நேரமாக நடைபெற்ற இந்தத் தேடுதல் வேட்டை தோல்வியடைந்தது. புலி தொடர்ந்து இடம்பெயர்ந்து, வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

இதனையடுத்து ஒன்பதாவது நாளாக இன்றும் புலியை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

4 எலைட் படையினர் வருகை

இரண்டு மருத்துவக் குழுவினர், 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் சிங்காரா பகுதியில் T23 புலியை தேடி வருகின்றனர். முதன்முறையாக மோப்ப நாயின் உதவியுடன் புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும் கோவையிலிருந்து புலியைப் பிடிக்க தனிப்பயிற்சி பெற்ற நான்கு எலைட் படையினர் முதுமலை வந்துள்ளனர்.

9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்

பொதுமக்கள் யாரும் வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்ல வேண்டாமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புலியை சுட்டுக்கொல்ல மாட்டோம்...

இந்நிலையில், புலியை சுட்டுப் பிடிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்க திட்டம் எனவும், புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை எனவும் தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாள்களில் புலி பிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details