தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூரில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் வந்ததையடுத்து, சுருக்கு மடி வலை உள்ள படகுகளை சீல் வைத்தனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் அலுவலர்களை சிறை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை விற்க கொண்டு சென்ற வாகனங்களை அலுவலர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மனு - சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை
கடலூர்: தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாமியார் பேட்டை உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனால் கடலூரில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை மீனவர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில், சாமியார் பேட்டை, கிள்ளை, அன்னப்பன்பேட்டை, ரெட்டியார் பேட்டை, பெரியகுப்பம், அஞ்சலிங்கம் பேட்டை, பொன்னன் திட்டு உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ தலைவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் சிறு படகு, பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதைத் தடை செய்து 33 மீனவ கிராம மக்களை பாதுகாத்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகமுரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.