தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு - FIRECRACKER FACTORY

கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து , நிவாரணம் அறிவிப்பு
கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து , நிவாரணம் அறிவிப்பு

By

Published : Jun 23, 2022, 5:59 PM IST

கடலூர்: எம்.புதூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, 'கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details