தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை 274 இடங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்தால் இங்குள்ள விவசாய நிலங்கள், கடலோர பகுதியில் உள்ள மீனவ கிராமங்கள், மீன் வளங்கள் ஆகியவை முற்றிலும் பாதிக்கும் என ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் கருத்தைக்கூட கேட்காமல் திட்டத்தை செயல்படுத்தலாம் என மத்திய அரசு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கைகளிலும் கால்களிலும் கயிற்றைக் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் முன்பு மண்டியிட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.