கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அமலநாதன் (60) இன்று விளை நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பலத்த காற்று, மழையின் காரணமாக மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அமலநாதன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நெல்லிக்குப்பம் காவல்நிலைத்திற்கு தகவல் கொடுத்தனர்.