நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் திடீர் விசிட்..! - election
கடலூர்: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது போது பார்வையாளர் கணேஷ் பீர் பாட்டில், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன், டிஎஸ்பி சாந்தி, , உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் அன்புச் செல்வன், 'கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் வீதம் 90 பேர் அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் முறையாக அனுமதி அட்டை பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 196 மேடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன' என்று அவர் தெரிவித்தார்.