கடலூரில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 496ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையிலிருந்து கடலூர் வந்த ஒன்பது பேருக்கும், மாலத்தீவு மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த இருவருக்கும் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஐந்து பேருக்கும் என இன்று மேலும் 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் ஐந்நூற்றைக் கடந்த கரோனா பாதிப்பு! - cuddalore news
கடலூர்: கரோனா வைரஸ் தொற்றால் இன்று 16 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தும், தடுப்புக் கட்டைகளை அமைத்தும் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர், பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 463 பேர் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.