கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், ரத்னா தம்பதியினர். கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமினில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விருத்தாசலம் மார்க்கெட் சென்றிருந்த ரத்னாவை வழிமறித்த கார்த்திகேயன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் ரத்னா அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் அடிப்படையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.