கடலூர்:மருதாடு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் இன்று (டிச.17) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், "இந்த கடையில் மாதந்தோறும் அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்குவதில்லை.
ஒரு மாதம் கொடுத்தால், அடுத்த மாதம் மாதம் கொடுப்பதில்லை; அரிசியும் சரியாக இல்லை. நல்ல அரிசி போட சொல்லுங்க.. சாமி.." என முறையிட்டனர். இதனால், அங்கிருந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் தற்போது, அரிசி நன்றாக இருப்பதாகவும் இதே போன்று தொடர்ந்து அரிசி வழங்க சொல்வதாக அவர்களிடம் தெரிவித்தார்.