கடலூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சண்முகநாதன். இவருக்கு நிஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், நெய்வேலி தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயமணி என்பவர்
நேற்று மதியம் சண்முகநாதனின் மனைவி நிஷாவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் மர்மமான முறையில் சண்முகநாதன் வீட்டில் இறந்துகிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல் துறையினர் ஜெயமணி உடலை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.