கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி முட்லூர் கொடிக்கால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). இவர் அந்தப் பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டாசுக் கடையில், திடீரென நேற்று (பிப்.27) இரவு தீப்பிடித்தது .
இதனால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியது. மேலும் அங்கு இருந்த இருசக்கர வாகனம் எரிந்து சேதமானது. அங்கு கட்டி போடப்பட்டிருந்த நாய் தீயில் கருகி இறந்தது.