தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடலூர்: நாள்தோறும் வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டத்தில் 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 23, 2020, 8:24 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடலூரில் இன்று (ஜூலை 23) கரோனா தொற்றால் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 40 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா முடக்கத்தால் வேளையிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ. 7,500 மாநில அரசு ரூ. 5,000 உடனடியாக வழங்க வேண்டும். நோய்த் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும். நோய் காலம் முடியும் வரை ரேஷன் கடைகளில் அரிசி சர்க்கரை பருப்பு எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

நாள்தோறும் வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூரில் 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலையில் இன்று 191 பேருக்கு கரோனா உறுதி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details