கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு விதைப்பு, நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இடுபொருட்கள், விவசாய தொழிலாளர்கள் நகர்வு மற்றும் பண்ணைக் கருவிகள் நகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வேளாண்மை விளை பொருட்களை சந்தைக்கும் தொழிற்சாலைக்கும் எடுத்த செல்ல சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு தொலைபேசியிலோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தால் அதனை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இதற்காக விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை.