தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரிடம் நாடகமாடிய பெண் - நடவடிக்கை எடுத்த எஸ்.பி.! - cuddalore latest news

கடலூர்: காவல் துறையை ஏமாற்ற முயன்ற தம்பதியை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் வாகனத்தைப் பறிமுதல் செய்தார்.

cuddalore-cheating-case
cuddalore-cheating-case

By

Published : May 24, 2021, 4:15 PM IST

கடலூர் மாவட்டத்தில் இன்று(மே.24) முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தடுப்பு அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கடலூர் லாரன்ஸ் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்தக் காரை நிறுத்தி காரில் இருந்த ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் அரவிந்தர் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறினர்.

காவல்துறையினரிடம் நாடகமாடிய பெண்

ஆனால், காரிலிருந்த பெண் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து மேலே போர்வை போர்த்திக் கொண்டு உடல் நிலை சரியில்லாதது போல் நாடகம் ஆடியதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர்கள் வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தார்.

இதையும் படிங்க: இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details