கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம், திருமுகம், இளங்கோவன், செல்லையா, கிருஷ்ணமேனன் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற நிலையில் துணை வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் அருள் பிரகாசம் என்பவரின் பெயர் இடம்பெறாமல் இருந்தது.
அதனைத் தொடர்ந்து அன்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.