தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிய கடலூர்! - கடலூரில் ஊரடங்கு உத்தரவு

கடலூர்: கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய அரசு இன்று சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மக்கள் நடமாட்டமின்றி மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடிய கடலூர்
வெறிச்சோடிய கடலூர்

By

Published : Mar 22, 2020, 5:05 PM IST

பிரதமர் மோடி இன்று சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடலூரில் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையம், சில்வர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

கோயில்கள், தேவாலயங்கள் மூடப்பட்டு, இன்று நடக்கவிருந்த திருமணங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடலூரில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வெறிச்சோடிய கடலூர்

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. கடலூர் தற்போது ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: முழுமையாக முடங்கிய திருப்பூர்; திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details