கடலூர்: கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே, மாட்டுவண்டியில் மணல் அள்ளுபவர்களுக்கு மணல்குவாரி அமைத்து தரக்கோரி, ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள மணல்கு வாரிகளில், அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், மணல் அள்ளிய போது, காவல்துறையால் பிடிக்கப்பட்ட மாட்டுவண்டிகளை உடனடியாக வண்டி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அரசு, தனியார் நிலங்களில் மணல்குவாரி அமைத்து லாரிகளுக்கு மணல் கொடுப்பதை தவிர்த்து, ஆற்றிலிருந்து நேரடியாக மணல் அள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.