இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கடலூரிலுள்ள தலைமைத் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என். சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுபடுத்தி படங்கள் மற்றும் செய்தி வெளியிட்ட பாஜகவினரைக் கண்டித்தும், கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை களங்கப்படுத்திய நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழுங்கினர்.