தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்ருட்டி அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளம் ஜோடி!

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி!
பண்ருட்டி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி!

By

Published : Mar 20, 2020, 2:57 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (29), மகேஸ்வரி (22) தம்பதி. இவர்கள் இருவரும் ஒன்பது மாதங்களுக்கும் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மணிகண்டன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரி, மணிகண்டன் உறங்கிய பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து போதை தெளிந்து பார்த்தபோது மனைவி தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, மணிகண்டன் அதே சேலையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் வெகு நேரமாகக் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பண்ருட்டி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் கதவை உடைத்து, சடலமாகக் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாகப் பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். திருமணமாகி ஒன்பது மாதமான ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details