தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2020, 12:30 PM IST

ETV Bharat / state

கரோனா: கடலூர் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் 1700 படுக்கைகள்

கடலூர்: கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 10 அரசு மருத்துவமனைகளில் 1700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கரோனாவுக்கு 1700 படுக்கைகள் தயார்
கரோனாவுக்கு 1700 படுக்கைகள் தயார்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 96 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, 144 தடை உத்தரவு பிறப்பிக்ககட்ட நாளிலிருந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் கரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

கரோனாவுக்கு 1700 படுக்கைகள் தயார்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அம்மாவட்டத்திலுள்ள சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு மருத்துவமனைகளில் 1700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 1000 படுக்கைகள், போர்வைகள், முகக்வசகங்கள் ஆகியவை தயார்படுத்தப்பட்டு கடலூர் நகர அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சந்திரலேகா நகர் மக்கள் - கருணை காட்டுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details