தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று- பாதிப்பு எண்ணிக்கை 1201 ஆக உயர்வு - Coronavirus infects 78 more in Cuddalore

கடலூர்: 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1201 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus infects 78 more in Cuddalore
Coronavirus infects 78 more in Cuddalore

By

Published : Jul 4, 2020, 10:04 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவை பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்துள்ளது. கடலூரில் நேற்றுமுன்தினம் வரை கரோனா தொற்றால் 1123 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் 78 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1201 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை 780 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 826 பேர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details