தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தொற்று! - ஊரடங்கு உத்தரவு5.0

கடலூர்: கரோனா வைரஸால் கடலூர் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Corona virus crosses one thousand in Cuddalore!
Corona virus crosses one thousand in Cuddalore!

By

Published : Jun 29, 2020, 12:39 AM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் போர்க்கால அடிப்படையில், சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை மீண்டும் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதேசமயம், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்; கிருமிநாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை, கரோனா தொற்றால் 976 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜூன் 28) மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,003-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 572 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும் 55 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 627ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details