சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.