144 தடை உத்தரவு பன்னிரண்டாவது நாளாக நீடிக்கும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரசுக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .
கடலூரில் பொதுமக்கள் கூட்டமாக காலை முதல் மாலை வரை சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரிவதால், மக்களுக்காக காவலர்கள் , மருத்துவத் துறையினர், துப்புரவு காவலர்கள் என அனைவரும் வீதியில் உள்ளனர் .