தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?' - கே. பாலகிருஷ்ணன் - Protest demanding relief assistance in Cuddalore

கூடலூர்: கரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அரசு கூறும் நிலையில், என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசை கண்டித்து ஆர்பாட்டம்
அரசை கண்டித்து ஆர்பாட்டம்

By

Published : Jun 9, 2020, 8:10 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரோனா ஊரடங்கு உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி, சிதம்பரம் தெற்கு சந்நிதி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, 'மத்திய, மாநில அரசுகள் கரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் பல லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், அதற்காக என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பேட்டி: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மேலும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அரசே ஏற்று கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்கப்படவில்லை என்ற காரணத்தினால், மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்றோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் கோரும் அடிப்படை கோரிக்கைகளைக் கூட, நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போதிய நிதி கேட்டும், மத்திய அரசு இதுவரை தரவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்துதான் இன்று (ஜூன்-9) தமிழ்நாடு முழுவதும் 1,500 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

அதுபோல கரோனா பாதிப்பு நான்கு நாட்களில் சரியாகப் போய்விடும் என தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால், இப்போது பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் தமிழ்நாடு அரசுதான் கூறுகிறது' எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் - தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!



பேட்டி: பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details