கடலூர் மாவட்டத்தில் இதுவரை 10ஆயிரத்து 334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று கடலூர் அடுத்த குமாரபுரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு உணவு சரியாக வழங்கப்படாததை கண்டித்து கடலூர் - பண்ருட்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர், உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை அழைத்து சரியான முறையில் உணவு வழங்கும்படி அறிவுறுத்தினர். இதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள் கலைந்துச் சென்றனர்.
கரோனா நோயாளிகள் போராட்டம் முன்னதாக சிதம்பரம் கரோனா வார்டில் உணவு சரியில்லை எனக் கூறி நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளி வர முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அருமையான நண்பனை இழந்து தவிக்கிறேன் - நாராயணசாமி இரங்கல்