தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டில் மது அருந்திய நோயாளி - 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மது அருந்திய கரோனா நோயாளி

கடலூர்: கரோனா வார்டில் மது அருந்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கரோனா நோயாளி மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

corona patient
corona patient

By

Published : Aug 14, 2020, 10:52 PM IST

கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 166ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதான கரோனா நோயாளி, கரோனா வார்டில் மது அருந்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அங்கிருப்பவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டியதால், மருத்துவர்களும், செவிலியர்களும் கரோனா வார்டுக்கு வர அஞ்சினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சி.கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமன் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் மது அருந்தி ரகளை செய்த கரோனா நோயாளி மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரது மனைவி மதுவை மறைத்து வைத்து கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவருடைய மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,890; உயிரிழப்பு - 117

ABOUT THE AUTHOR

...view details