வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடலூர், விருதாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். அப்போது கடலூர் மாவட்டம் குமாரப்பேட்டையைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், ஈரானில் இருக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் கணவர் - கைக்குழந்தையுடன் மனு அளித்த பெண்!
கடலூர்: ஈரானில் இருக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், ”எனது கணவர் இளஞ்செழியன் ஆறு மாதங்களுக்கு முன்பு ஈரானில் உள்ள கீஸ் தீவுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்றார். அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டுவருகிறார். நான் என்னுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் மன வேதனையில் இருந்துவருகிறேன். எனவே எனது கணவர் இந்தியா வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்: மாநில மொழிகளில் வழங்க கனிமொழி, ராமதாஸ் வலியுறுத்தல்!