தனியார் ரசாயன தொழிற்சாலையில் மேலும் 40 ஊழியர்களுக்குக் கரோனா - தனியார் ரசாயன தொழிற்சாலை
கடலூர்: தனியார் ரசாயன தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![தனியார் ரசாயன தொழிற்சாலையில் மேலும் 40 ஊழியர்களுக்குக் கரோனா corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-320-214-covid-19-update-1-0308newsroom-1596459460-377-0408newsroom-1596527420-3.jpg)
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் சிப்காட் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
ஏற்கெனவே இந்த தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ரசாயன தொழிற்சாலையில் அதிக அளவு தொற்று பரவி வருவதால், இதனைச் சுற்றியுள்ள கிராமத்திற்கும் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
இதனால் குடிகாடு ஊராட்சி மன்றத் தலைவர் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.