கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்று ஊர் திரும்பியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவானது நேற்றைய தினம் தெரியவந்தது.
அப்போது கணவன், மனைவி இருவரும் தங்களின் சொந்த வேலையாக பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் சென்றுவிட்டு, மீண்டும் அரசுப் பேருந்தில் வடலூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, சுகாதாரத் துறையினர் அத்தம்பதியினரை செல்ஃபோனில் தொடர்புகொண்டு, அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும்படியும் கூறி உள்ளனர்.
இதற்கு தம்பதியினர் தாங்கள் அரசுப் பேருந்தில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருப்பதைக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பேருந்து ஓட்டுநரைத் தொடர்புகொண்டு, தம்பதியினருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள செய்தியைத் தெரிவித்தனர்.