தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் 26 பேருக்கு கரோனா உறுதி; 42 கிராமங்களுக்குச் சீல் - கடலூர் மாவட்டச் செய்திகள்

கடலூரில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் வசித்தப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

-42-villages-sealed
-42-villages-sealed

By

Published : Apr 20, 2020, 9:28 PM IST

கடலூர் மாவட்டத்தில், இதுவரை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நேற்று 2 வயது பெண் குழந்தை உட்பட 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டன.

அதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

42 கிராமங்களுக்குச் சீல்

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சுகாதார பணி இணை இயக்குநர் கீதா இருவரின் உத்தரவின் பேரில், 200க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்தப் பகுதிகள், அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோனை செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள 7 கிலோ மீட்டர் தொலைவிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் மொத்தமாக 42 கிராமங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

ABOUT THE AUTHOR

...view details