தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50 மருத்துவர்கள் ஒன்றிணைந்து பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல்! - மருத்துவர்கள் ஒன்றிணைந்து பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல்

கடலூர்: ஐம்பது மருத்துவர்கள் ஒன்றிணைந்து ஜூம் செயலி மூலம் கரோனா வைரஸுக்கான விழிப்புணர்வு பாடல் பாடியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Corona awareness song sung by 50 doctors together
Corona awareness song sung by 50 doctors together

By

Published : Aug 19, 2020, 9:07 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மத்திய- மாநில அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

அதன்படி கடலூரில் 50 மருத்துவர்கள் ஒன்றிணைந்து கரோனா தொற்றுக்கு விழிப்புணர்வு பாடல்கள் பாடியுள்ளனர்.

இப்பாடலை நெய்வேலி என்.எல்.சி., மருத்துவமனையிலன் முதன்மை மருத்துவராகப் பணியாற்றும் பிரேம்குமார் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பாடலை பிற மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் 50 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ஜூம் செயலின் மூலம் பாடியுள்ளனர்.

50 மருத்துவர்கள் ஒன்றிணைந்து பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல்

இப்பாடல் கரனாவை எதிர்த்தும், தேசபக்தி, தேச ஒற்றுமை, நாட்டு மக்களுக்கு உத்வேகம், உற்சாகத்தையும் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

“நெஞ்சே எழு" என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள பாடலை மாற்றி, இப்பாடலை பாடியுள்ளனர். தற்போது இப்பாடல் சமூகவலைத்தளங்களின் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details