தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு விழாவில் செல்போன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து.. சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்!

கடலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் செல்போனில் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 16, 2022, 6:01 PM IST

செல்போன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பு

கடலூர்:ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பூஜ்ய குறைபாடு, பூஜ்ய விளைவு குறித்தான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. 9.30 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பதாக இருந்த நிலையில் இறுதி நேரத்தில் வேறு ஒரு நிகழ்வுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் துறை அதிகாரிகளே கருத்தரங்க நிகழ்வை தொடங்கிய நிலையில், செல்போன் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது.தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருவது வழக்கம்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், பாடக்கூடியவர்கள் நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதனை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் செல்போன் மூலம் தமிழ்த்தாய் பாடல் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விடுதி மாணவிகளிடம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை - நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

ABOUT THE AUTHOR

...view details