நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், புதிய என்எல்சி சேர்மன் ஒரு குழு அமைத்து அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் சிஐடியு, தொமுச ஆகிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் காலதாமதம் ஏற்பட்டதால் அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் என்எல்சி செயல் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கை குறித்து நிறைவேற்றுவதற்காக 10 நாள்கள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் இன்று நடைபெறுகின்ற போராட்டத்தை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு என்எல்சி தரப்பிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 303 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டதாகவும் நாள் ஒன்றுக்கு 130 ரூபாய் முதல் 158 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கவதாகக் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.