தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கையூட்டு கேட்கும் ஒப்பந்த ஊழியரின் காணொலி வைரல் - சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை செய்திகள்

சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனையில் உடல் தகுதிச் சான்று கொடுப்பதற்கு இளைஞரிடம் கையூட்டு கேட்கும் ஒப்பந்த ஊழியரின் காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

லஞ்சம் கேட்கும் ஒப்பந்த ஊழியரின் வீடியோ
லஞ்சம் கேட்கும் ஒப்பந்த ஊழியரின் வீடியோ

By

Published : Jan 6, 2022, 7:38 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பிரபு. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் எழுத்தர் பணி காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பம் செய்வதற்காக உடல் தகுதிச் சான்று வாங்குவதற்கு சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பிரபு சென்றுள்ளார்.

அங்கு ஒப்பந்த ஊழியராகப் பணிபுரியும் பிரகாஷ், உடல் தகுதிச் சான்று பெற வேண்டும் என்றால் 1000 ரூபாய் பணம் கையூட்டு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கையூட்டு கேட்கும் ஒப்பந்த ஊழியரின் காணொலி

அதற்கு பிரபு அரசு மருத்துவமனையில் ஏன் கையூட்டு கொடுக்க வேண்டும் எனக் கேட்டதற்கு, "மருத்துவர் ஒன்றும் சும்மா படித்துவரவில்லை. அவர் செலவு செய்துதான் படித்துவந்தார். மருத்துவர் எப்படிதான் சம்பாதிக்க முடியும்" என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை பிரபு காணொலியாகப் பதிவுசெய்துள்ளார். மேலும் இந்தக் காணொலியில் பிரகாஷ் மற்றொரு நபரிடம் 50 ரூபாய் பணம் கேட்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: Punjab Protest: 'பஞ்சாப் சம்பவம் மூலம் வெளிப்பட்ட காங்கிரசின் எண்ணம்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details