கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய மேம்பாடு, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று காங்கிரஸ் திட்டங்களை விளக்குவார்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பெரியார் சம்பந்தமான சர்ச்சை பேச்சு மறக்கப்பட வேண்டிய விஷயம் என ரஜினிகாந்த் கூறுகிறார். மறக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை அவர் ஏன் பேசினார் என்ற கேள்வி எழுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் இதழின் அட்டையில் கருப்பு மையில் எழுதி சோ வெளியிட்டிருந்தார். அந்த விழாவில் ரஜினிகாந்த் அதையும் பேசியிருக்கலாம். ரஜினிகாந்த் சொந்தமாக சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லி பேசினால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உரிய இடங்களை திமுக கூட்டணியில் பெறும்” என்றார்.
இதையும் படிங்க...எருது விடும் விழா: பைக்கை பரிசாக வென்ற காளைகள்