தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆர்ப்பாட்டம்!

கடலூர்: கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By

Published : Jun 10, 2021, 3:27 PM IST

தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் ஜவான் பவான் எதிரே நகரச் செயலாளர் அமர்நாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அப்போது தமிழ்நாடு, தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற தகுதியான நபர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் பயனடைய அரசு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

தனியார் அவசர ஊரதிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details