கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதிக்குட்பட்ட அன்னங்கோவில், வெள்ளாற்று, முகத்துவாரம் அருகே கடந்த 29ஆம் தேதி அன்று சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்களுக்குள் பிரச்னை எழுந்தது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கை தவிர்த்திடும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் அனைத்து மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
சுருக்கு மடி வலை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை - banned web
கடலூர்: சுருக்கு மடி வலை கொண்டு மீன்பிடித்தல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேற்படி சம்பவத்திற்கு காரணமானவர்களின் மீது காவல்துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் கடந்த 30ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மீனவர்கள் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டது .
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது என மீனவ பிரதிநிதிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, இன்று முதல் அனைத்து மீனவர்களும் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை மட்டும் பயன்படுத்தி மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். மேலும் சுருக்குமடி வலையை கொண்டு மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.