தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வாழ்த்திய ஆட்சியர்! - cuddalore district news

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று பேரை அவர்களது குடும்பத்துடன் அழைத்து மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி வாழ்த்தினார்.

கடலூர் மாவட்டச் செய்திகள்  யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பண்ருட்டி மாணவர்கள்  கடலூர் மாவட்ட ஆட்சியர்  cuddalore district collector  cuddalore district news  cuddalore district latest news
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வாழ்த்திய ஆட்சியர்

By

Published : Aug 5, 2020, 9:47 PM IST

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய பதவிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்திவருகிறது. அதன்படி கடந்தாண்டு நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மருங்கூரைச் சேர்ந்த ராமநாதன் மகள் ஐஸ்வர்யா தேசிய அளவில் 47ஆவது இடத்தையும், சிவப்பிரகாசம் மகள் பிரியங்கா தேசிய அளவில் 68ஆவது இடத்தையும் புதுப்பேட்டையைச் சேர்ந்த சம்பத் மகள் கிருஷ்ணபிரியா தேசிய அளவில் 514ஆவது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வாழ்த்திய ஆட்சியர்

அவர்களைப் பாராட்டுவதற்காக குடும்பத்தோடு அழைத்த மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி, அவர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும், சிறந்த முறையில் பணி செய்து இந்திய ஆட்சிப் பணியில் சிறந்த பணியாளராகத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

இதையும் படிங்க:ஐஏஎஸ் தேர்வில் 286ஆவது இடம் - சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி!

ABOUT THE AUTHOR

...view details